LATEST NEWS
500 படங்களில் நடித்ததை வைத்து ஒரே படத்தை தயாரித்த பாக்யராஜ் பட நடிகர்… தோல்விக்கு பின் வறுமையில் இறந்து போன பரிதாபம்…

80 90 காலகட்டங்களில் தொடர் படங்களில் நடித்து தமிழில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார். 1983-ஆம் ஆண்டு இயக்குநர் பாக்யராஜ் இயக்கி,நடித்த முந்தானை முடிச்சு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் தவக்களை.முந்தானை முடிச்சு திரைப்படத்தில் அவரின் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு நகைச்சுவை கதாபாத்திரங்கள் அவருக்கு கிடைத்து வந்தது.இவர் கடைசியாக அபூர்வ தீவு என்ற திரைப்படத்தில் தான் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா உலகில் சிறப்பாக வந்தாலும் அவர் எடுத்த ஒரே ஒரு தவற முடிவால் அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டது.
அது என்னவென்றால் தனது மொத்த காசையும் போட்டு விஜயா புரொடக்ஷன் என்ற சினிமா தயாரிப்பு கம்பெனிக்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்தார். இந்த கம்பெனி “மண்ணில் இந்த காதல்” என்ற திரைப்படத்தை தயாரித்து இருந்தது .ஆனால் திரைப்படம் வெளிவந்து படுதோல்வி அடைந்ததால் தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்ததோடு சொந்த வீட்டையும் விற்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார்.
அதன்பிறகு சினிமாவில் இவர் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் 2017 ல் தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக தவக்களை காலமானார். இவர் தமிழ் சினிமாவில் 500 திரைப் படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தான் சம்பாதித்த அனைத்து காசையும் படம் தயாரிக்க போட்டு, அத்திரைப்படம் தோல்வி அடைய அத்தோல்வியிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இப்படி பலர் சினிமாவில் அகலக்கால் வைத்து தங்களது வாழ்க்கையை தாங்களே கெடுத்துக் கொண்டுள்ளனர்.