LATEST NEWS
முதன்முறையாக இணையத்தில் வெளியான ‘தளபதி 68’ பட இயக்குனர் வெங்கட் பிரபுவின் திருமண புகைப்படம்… Unseen clicks…

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இவர் 2007ல் வெளிவந்த சென்னை 600028 என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி போன்ற ஹிட் திரைப்படங்களை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
மேலும் இவர் காஜல், ஆனந்தி நடிப்பில் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரிஸையும் இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து வெங்கட் பிரபு சமீபத்தில் சிம்பு நடிப்பில் மாநாடு என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். சமீபத்தில் இவர் தெலுங்கில் கஸ்டடி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இவர் இயக்கிய படங்களில் மங்காத்தா, மாநாடு போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி படங்களாக அமைந்தது.
இதை தொடர்ந்து தற்பொழுது இவர் நடிகர் விஜய் வைத்து தளபதி 68 திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. மேலும் தளபதி 68 திரைப்படத்திற்க்கான பணிகளும் தற்பொழுது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு 2001ல் ராஜலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது நடிகர் வெங்கட் பிரபுவின் திருமண புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…