CINEMA
‘ஜெயிலர்’ வெற்றி கொண்டாட்டம்… படக்குழு 300 பேருக்கு சன் பிக்சர்ஸ் கொடுத்த விலையுயர்ந்த பரிசு… வைரலாகும் வீடியோ…

தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்று வரை முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் திரைப்படம்தான் ஜெயிலர். இதுவரை உலக அளவில் சுமார் 600 கோடிக்கு மேல் இந்த திரைப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
படம் எடுக்க செலவு செய்யப்பட்ட பட்ஜெட்டை விட பல கோடி ரூபாய் இந்த திரைப்படம் லாபம் கொடுத்துள்ளதால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிகிறது. அதனால் இவர் தற்பொழுது பணத்தை தண்ணீராய் செலவு செய்து வருகிறார்.
நடிகர் ரஜினிக்கு 110 கோடி வரை ஷேர் வழங்கியது மட்டுமல்லாமல் பிஎம்டபிள்யூ கார் ஒன்றை பரிசாக வழங்கினார். அதனைப் போலவே இயக்குனர் நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோருக்கும் குறிப்பிட்ட தொகையை செக்காக வழங்கி காரையும் பரிசாக வழங்கினார்.
இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தில் பணியாற்றிய படக்குழு 300 பேரை வரவைத்து விழா நடத்தி அனைவருக்கும் கிப்ட் கொடுத்து இருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ஜெயிலர் என பொறிக்கப்பட்ட தங்க காசு தான் கிப்ட் ஆக கொடுக்கப்பட்டு இருக்கிறது. தற்பொழுது இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
Mr.Kalanithi Maran felicitated more than 300 people who worked for #Jailer with gold coins today. #JailerSuccessCelebrations pic.twitter.com/qEdV8oo6dB
— Sun Pictures (@sunpictures) September 10, 2023