LATEST NEWS
பிளாக் பாஸ்டர் ‘ஜெயிலர்’ ரிலீஸ்… கூலாக இமயமலை சென்ற சூப்பர் ஸ்டார்… வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று வருகிறது.
இத்திரைப்படத்தில் பல அதிரடி ஆக்சன் காட்சிகள் இடம்பெற்று ப்ளாக் பஸ்டர் திரைப்படமாக ஜெயிலர் திரைப்படம் அமைந்துள்ளது.
நேற்று ஜெயிலர் திரைப்படம் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியானது. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதற்கு முந்தைய தினமே இமயமலை பயணத்திற்கு புறப்பட்டு விட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் ரஜினிகாந்த் இமயமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக அவர் இமயமலை செல்லவில்லை.
இந்த நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் அவர் மீண்டும் இமயமலை சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்று சில நாட்கள் அங்கு ஆன்மீக பயணம் செய்த பின்னர் சென்னை திரும்புவார் என்றும் அவர் திரும்பிய பிறகுதான் தான் ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது இமயமலையில் இருக்கும் நடிகர்ரஜினிகாந்தின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.