லக்ஷ்மி மேனனுடன் காதல் திருமணம்?… முதல் முறையாக திருமணம் பற்றி வாய் திறந்த நடிகர் விஷால்… வைரலாகும் ட்விட்டர் பதிவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

லக்ஷ்மி மேனனுடன் காதல் திருமணம்?… முதல் முறையாக திருமணம் பற்றி வாய் திறந்த நடிகர் விஷால்… வைரலாகும் ட்விட்டர் பதிவு..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். இவர் எந்த ஒரு திரைப்படத்தில் நடித்தாலும் அவருடன் சேர்ந்து நடிக்கும் நடிகைகளுடன் காதல் வயப்பட்டுள்ளார் என்பது குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி வருவது வழக்கம் தான். இவர் நடிகை லட்சுமி மேனன் உடன் இணைந்து பாண்டியநாடு மற்றும் நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். அப்போது இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் பரவிய நிலையில் விஷால் தாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்தான் என்று தெரிவித்தார்.

அதன் பிறகு விஷால் சரத்குமாரின் மகள் வரலட்சுமி காதலித்த நிலையில் அதுவும் போலியான செய்தி என தெரிய வந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அனிஷா என்ற பெண்ணை விஷால் திருமணம் செய்து கொள்ள இருந்தார். ஆனால் நிச்சயதார்த்தம் வரை சென்ற இவர்களின் உறவு கல்யாணத்திற்கு முன்பே முறிந்து விட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் விஷாலுக்கும் லட்சுமிமேனனுக்கும் இடையே காதல் என தகவல் பரவியது.

Advertisement

இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் லட்சுமி மேனனுக்கும் தனக்கும் திருமணம் என்று வெளியான செய்திகள் எதுவும் உண்மை இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார். பொதுவாக என்னைப் பற்றிய எந்த ஒரு போலி செய்திகளுக்கும் வதந்திகளுக்கும் நான் பதிலளிப்பது இல்லை. அதற்கு பதில் சொல்வது பயனற்றது என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் தற்போது நடிகை லஷ்மி மேனன் உடனான எனக்கு திருமணம் என்ற வதந்தி பரவி வருவதால் அதிலும் ஒரு நடிகை அதாவது ஒரு பெண்குறித்து இவ்வாறு வதந்தி பரவி வருவதால் இதற்கு விளக்கம் அளிப்பதாக கூறி ட்விட்டரில் விஷால் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். தற்போது அந்த பதிவை இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in