LATEST NEWS
“ரொம்ப பீர் குடிக்காதீங்க தொப்ப போடும்”.. பீர் கிளாஸ் முன்பு சீரியல் நடிகை கண்மணி மனோகரன்.. வைரல் புகைப்படம்..!!
தமிழ் சின்னத்திரையில் வளர்ந்து வரும் சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை கண்மணி மனோகரன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா என்ற சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த சீரியலில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது. அதன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.
பாரதிகண்ணம்மா சீரியல் இருந்து விலகிய பிறகு ஜீ தமிழில் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. அதன்படி தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அந்த சீரியலில் ஒரு தைரியமான குடும்ப பெண்ணாக இவர் நடித்து வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கண்மணி தற்போது ஹோட்டலில் பீர் கிளாஸ் முன்பு அமர்ந்திருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பீர் குடிக்காதீங்க தொப்ப போடும் என கமாண்ட் செய்து புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.