LATEST NEWS
ஆளவந்தான் கெட்டபில் ஜெயிலர் படம் பார்க்க வந்த காயத்ரி ரகுராம்.. வெளியான புகைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் பிரபுதேவா நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் காயத்ரி ரகுராம். அதனைத் தொடர்ந்து பரசுராம், விசில், வானம் மற்றும் வை ராஜா வை உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். நடிப்பதை தாண்டி நடன இயக்குனராகவும் இருந்துள்ளார். மேலும் யாதும் ஆகி நின்றாய் என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.
இதனிடையே கடந்த சில வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு வரும் காயத்ரி ரகுராம் அடிக்கடி அரசியல் கருத்துக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் திருப்பதி சென்று மொட்டை அடித்து நெற்றியில் ராமத்துடன் கையில் மயிலிறகுடன் இருக்கும் புகைப்படங்களை காயத்ரி ரகுராம் பகிர்ந்து இருந்தார். தற்போது காயத்ரி ரகுராம் ஆளவந்தான் கெட்டப்பில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் பார்ப்பதற்கு சென்றுள்ளார்.
நேற்று ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த திரைப்படத்தை பிரபலங்கள் பலரும் திரையரங்கிற்கு நேரில் சென்று பார்த்தனர். அதன்படி காயத்ரி ரகுராம் நேற்று ஆளவந்தான் கெட்டப்பில் ஜெயிலர் திரைப்படம் பார்ப்பதற்கு சென்றிருந்த நிலையில் அது தொடர்பான புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.