LATEST NEWS
தொங்கும் கயிற்றில் யோகாசனம் செய்து அசத்தும் பிரபல நடிகர்.. வியந்து பார்க்கும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகள் திருமணம் செய்து கொண்டு தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அப்படி வாழ்ந்து வரும் நட்சத்திர ஜோடிகளில் ஒருவர் தான் ஆர்யா- சயீஷா தம்பதியினர். நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.
தற்பொழுது இவர் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வீரமணி கலை இயக்கம் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் ரிலீசாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நடிகர் ஆர்யா நடிகை சாயிஷாவின் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் ‘கஜினிகாந்த்’ என்னும் திரைப்படத்தில் ஒன்றாக நடித்த போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இதைத் தொடர்ந்து இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதியினருக்கு தற்பொழுது அரியானா என்ற பெண் குழந்தை உள்ளது.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் ஆர்யா. இவர் எப்பொழுதும் உடற்பயிற்சி மற்றும் யோகாசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர். தற்பொழுது நடிகர் ஆர்யா தொங்கும் கயிற்றில் யோகாசனம் செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவானது படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ …
View this post on Instagram