LATEST NEWS
என்னப்பா….! ப்ளு சட்டை மாறன் இப்படி சொல்லிட்டாரு…. செம ஷாக்கில் தனுஷ் ரசிகர்கள்….!!!!
செல்வராகவன் இயக்கத்தில் நேற்று வெளியான நானே வருவேன் திரைப்படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் பாசிட்டிவான விமர்சனம் கொடுத்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என்று கலக்கி வருபவர் நடிகர் தனுஷ். ஆரம்பத்தில் பல சரிவுகளை சந்தித்தாலும் படிப்படியாக முன்னேறி இந்த இடத்திற்கு வந்துள்ளார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் தற்போது நானே வருவேன் திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் எந்த ஒரு பிரமோஷனும் செய்யப்படாமல் திடீரென்று வெளியானது.
இந்த திரைப்படத்தை கலைப்புயல் எஸ் தானு தயாரித்திருந்தார். நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம் அண்ணன் தம்பி என இரண்டு வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து வெளியானது. தனுஷ் ஹீரோவாகவும், மிரட்டலான வில்லனாகவும் கலக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு நல்ல ஒரு பலம். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் இந்த படத்திற்கு விமர்சனம் கொடுத்துள்ளார். எந்த ஒரு திரைப்படத்தைப் பற்றியும் குறை கூறும் ப்ளூ சட்டை மாறன் இந்த திரைப்படத்தை நல்லவிதமாக பேசியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வில்லன் கதாபாத்திரத்தை வலுவாக உருவாக்கியுள்ளது படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் வில்லனுக்கு காட்சிகளை அதிகப்படுத்தி இருந்தால் படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்து இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். அத்துடன் நானே வருவேன் படம் ஒரே நேரத்தில் ஹாரர், சைக்கோ திரில்லர் படம் பார்த்த திருப்தியை அளிப்பதாக அவர் தெரிவித்தார். எப்போதும் படங்களை கழுவி கழுவி ஊற்றும் இவர் நானே வருவேன் படத்திற்கு நல்ல விமர்சனத்தை கொடுத்து இருப்பது மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்ததாக இன்று வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு அவர் என்ன விமர்சனம் கொடுக்கப் போகிறார் என்று எதிர்பார்த்து காத்துள்ளனர்.
