தமிழ் சினிமாவில் எரும சாணி விஜய் என்றால் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இவருக்கு டிஜிட்டல் உலகத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்து விட்டார். முன்னணி நடிகர்களின் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
ஹிப்ஹாப் ஆதி நடித்த நட்பே துணை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். அதே சமயம் அருள்நிதி நடிப்பில் வெளியான டி ப்ளாக் என்ற திரைப்படத்தையும் இயக்கி வெற்றி கொடுத்தார். நடிகர் மற்றும் இயக்குனர் என பன்முகம் கொண்ட கலைஞராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் எரும சாணி விஜயின் திருமணம் குறித்த ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அவர் ஆறு வருடமாக காதலித்து வந்த தன்னுடைய காதலியை கரம் பிடித்துள்ளார். காதலர் தினமான நேற்று திருமண செய்தியை அறிவிக்க ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க