திடீர் திருப்பம்..! திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி குடுத்தே ஆகணும்.. விசிக அதிகாரபூர்வ தீர்மானம்… தவெக வட்டாரத்தில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திடீர் திருப்பம்..! திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி குடுத்தே ஆகணும்.. விசிக அதிகாரபூர்வ தீர்மானம்… தவெக வட்டாரத்தில் பரபரப்பு..!!

Published

on

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் தொண்டர்கள் வலியுறுத்தியுள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற விசிக மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதே கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் திருமாவளவன் துணை முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற மற்றொரு முக்கிய தீர்மானமும் கொண்டு வரப்பட்டுள்ளது. தவெக மற்றும் விசிக இடையிலான அரசியல் கூட்டணி நகர்வுகள் தீவிரமடைந்து வரும் சூழலில், இந்தத் தீர்மானம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

முன்னதாக, திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று திருமாவளவன் திட்டவட்டமாக அறிவித்திருந்தார். கட்சியின் தலைமை அவ்வாறு அறிவித்திருந்த போதிலும், விசிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தற்போது இத்தகைய தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in