TRENDING
பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப் போவது யார் தெரியுமா?…. ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் தகவல்….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் முதலில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அடுத்தடுத்து வாரங்களில் ஜி பி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, விஜே மகேஸ்வரி மற்றும் நிவாஷினி என போட்டியாளர்கள் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் 15 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் ஒளிபரப்பாகி வந்த நிலையில் இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஜி.பி முத்து மீண்டும் வைல்டு கார்டு என்டியாக கொண்டு வர வேண்டுமென ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிக் பாஸ் வீட்டில் நடந்து முடிந்துள்ள நிலையில் அதில் மைனா, ஜனனி, ரட்சிதா, குயின் சி,தனலட்சுமி மற்றும் கதிரவனாகியோர் நாமினேட் ஆகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கதிரவன் மற்றும் குயின்சி இருவர்களில் ஒருவர்தான் இந்த வாரம் எலிமினேட் ஆக அதிக வாய்ப்புள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் யார் வெளியேற்றப்படுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
