பிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக…. ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் படைத்த சாதனை…. என்ன தெரியுமா….???? - cinefeeds
Connect with us

TRENDING

பிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக…. ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் படைத்த சாதனை…. என்ன தெரியுமா….????

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற தற்போது 11 போட்டியாளர்கள் வெளியேறி பத்து போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் போட்டி கடுமையாகி வரும் நிலையில் தற்போது மொத்தம் ஏழு பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

மணிகண்டன், ஏ டி கே மற்றும் அமுதவாணன் ஆகிய மூன்று பேரும் கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்கேல் வெற்றி பெற்றதால் அந்த மூன்று பேரும் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்படவில்லை. எனவே மீதமுள்ள ஏழு பேரில் மட்டும்தான் நாமினேஷன் நடைபெற வேண்டும். அந்த ஏழு பேரும் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி விக்ரமன், அசீம், தனலட்சுமி, ரட்சிதா, கதிரவன், மைனா மற்றும் ஷிவின் ஆகிய ஏழு பேரும் நாமினேசன் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

இந்நிலையில் தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன் அண்ணன் மணிகண்டன். அதாவது அதிக முறை கேப்டன் ஆனவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் மணிகண்டன். இந்த சீசனில் கிட்டத்தட்ட நான்கு முறை அவர் கேப்டன் ஆகியுள்ளார். இந்த வாரம் நடைபெற்ற கேப்டன்சி டாஸ்க் வெற்றி பெற்றதன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு யாஷிகா பிக் பாஸ் இரண்டாவது சீசனில் மூன்று முறை கேப்டன் ஆன நிலையில் அவரை விட அதிகமாக தற்போது மணிகண்டன் கேப்டன் பதவியைப் பெற்று அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in