LATEST NEWS
நகைப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. காலையிலேயே சவரனுக்கு ₹5,600 குறைந்த தங்கம்.. கடகடவென இறங்கும் தங்கம் விலை..!!
தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இதனால் மக்கள் பெரும் வியப்பில் உள்ளனர். இந்நிலையில் கடந்த 30 நாள்களில் தங்கம் விலை அதிரடியாக சரிந்து, சவரனுக்குப் பல்லாயிரக்கணக்கில் குறைந்துள்ளது நகைப்பிரியர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 13-ம் தேதி நிலவரப்படி 10 கிராம் தங்கம் ₹1,38,600 என்ற உச்சத்தில் விற்பனையாகி வந்த நிலையில், தொடர் சரிவு காரணமாக இன்று அது ₹1,33,000 ஆகக் குறைந்துள்ளது. இதன் மூலம் கடந்த ஒரு மாத காலத்திற்குள் மட்டும் 10 கிராம் தங்கத்தின் விலையில் ₹5,600 வரை வீழ்ச்சி ஏற்பட்டு, நடுத்தர மக்களுக்கு ஓரளவு நிம்மதியைத் தந்துள்ளது.
சர்வதேச அளவில் நிலவி வரும் பல்வேறு பொருளாதார மாற்றங்களே இந்த திடீர் விலை சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. உலகளவில் மீண்டும் சூழ்ந்துள்ள போர் பதற்றம் மற்றும் சர்வதேச பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள தொடர் வீழ்ச்சி போன்ற உலகளாவிய காரணிகளால், முதலீட்டாளர்களின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, வரும் நாட்களிலும் தங்கம் விலை மேலும் குறைவதற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
