நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யாவின் மனைவியை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் அழகிய திருமண புகைப்படம்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யாவின் மனைவியை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் அழகிய திருமண புகைப்படம்….!!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான குத்து சண்டையை மையப்படுத்திய சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வெற்றியை தேடி தந்தது. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகை சாய்ஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை சாய்ஷா வனமகன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அவரைத் தொடர்ந்து ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் மற்றும் காப்பான உள்ளிட்ட திரைப்படங்களை நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தங்களின் செல்ல மகளுக்கு தூய்மை என்ற பொருள் கொண்ட அரியனா என அழகான பெயரை சூட்டியுள்ளனர்.

Advertisement

இதனிடையே ஆர்யாவிற்கு சத்யா என்ற ஒரு தம்பி உள்ளார். இவர் தமிழில் வெளியான புத்தகம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அமர காவியம், எட்டுத்திக்கும் மதயானை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் காதல் டூ கல்யாணம் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாவனா என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் அப்போது திருமணத்தின் போது எடுத்துக் கொண்ட ஒரு அழகிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement