#image_title

இவர் 1989 ஆம் ஆண்டு மே மாதம் பழனியில் பிறந்தவர். இவர் பிறந்து வளர்ந்தது அனைத்தும் பழனியில் தான்.

இவர் முதன்முதலாக தொலைக்காட்சி தொகுப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமானார்.

அதன் பிறகு தான் இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து புகுந்த வீடு, ஆண்பாவம், மாயா, தெய்வம் தந்த வீடு, மெல்ல திறந்தது கதவு மற்றும் நினைக்கத் தெரிந்த மனமே உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

அதேசமயம் திருமணம் போன்ற சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

பழனியில் உள்ள முனிசிபல் மேல்நிலைப் பள்ளியில் இடைநிலைக் கல்வியை முடித்த இவர் புதுக்கோட்டையில் பொறியியல் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.

இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு பெயரை தேடித் தந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தான்.

இந்த சீரியலில் ஜீவா கதாபாத்திரம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்து விட்டது.

இவர் அஜந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவரின் மனைவி போட்டோகிராபராக பணியாற்றி வருகின்றார்.

இவர்கள் இருவரும் பாலிடெக்னிக் படிப்பை ஒன்றாக தான் படித்தனர்.

அப்போது ஏற்பட்ட நட்பு பிறகு காதலாக மாறிய நிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது இவர்களுக்கு மகிழினி என்ற மகள் உள்ளார். தற்போது இவரின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.