#image_title

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் குக் வித் கோமாளி.

இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் தான் சுனிதா.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளான ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக சுனிதா பங்கேற்று உள்ளார்.

நடனத்தின் மூலமாக தமிழகத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர்.

அதன் பிறகு தன்னுடைய மொழியை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் முடிந்த அளவிற்கு அனைத்து இடங்களிலும் தமிழில் பேச முயற்சி செய்து வருகிறார். நடனத்தில் மட்டுமல்லாமல் காமெடியிலும் இவர் பிரபலமானவர்தான்.

இதனால் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதற்கான முக்கிய காரணம் இவரின் உழைப்பு மற்றும் விடா முயற்சி தான். தற்போது இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருவதால் ரசிகர்கள் ஏராளமானோர் இவரை பாலோ செய்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார்.

அதில் நடனம்,சமையல் மற்றும் காமெடி என்று ஏதாவது ஒரு வீடியோவை இவர் தினம் தோறும் பகிர்ந்து கொண்டே வருகிறார்.

வடமாநிலத்தை சேர்ந்த இவர் குழந்தை போல கொஞ்சும் தமிழில் பேசுவது ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வைரல் தான்.

இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் சுருதிஹாசன் தோழியாக நடித்திருப்பார்.

இந்நிலையில் சுனிதாவுக்கு ஒரு தங்கையும் உள்ள நிலையில் அவரின் அழகிய குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.