#image_title

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகர் நடிகைகள் பலரும் உள்ளனர். அப்படி விஜயின் நடிப்பில் வெளியான பூவே உனக்காக திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை அஞ்சு அரவிந்த். இவர் அதிகம் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பூவே உனக்காக, எனக்கு ஒரு மகன் பிறப்பான், வானத்தைப்போல என சில திரைப்படங்களில் மட்டுமே இவர் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர். இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இதனிடையே இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு தேவதாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் 2004 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பிறகு 2006 ஆம் ஆண்டு வினய சந்திரன் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு அன்விதா வினயன் என்ற மகன் இருக்கிறார். தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.