விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக நுழைந்தவர் தான் கூத்து கட்டும் பிரபலம் தாமரை. அப்போது அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் மற்றும் ஓலை வீடு என சில மோசமான பகிர்வுகளை பகிர்ந்திருந்தார்.
அதனால் அவருக்கு பலரும் உதவி கரம் நீட்டினர். பிக் பாஸில் இருந்து வெளியேறிய பிறகு சில படங்கள் மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் என கமிட்டாகி பிஸியாக நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
இதனிடையே சின்னத்திரை பிரபலங்கள் பலரும் சொந்தமாக ஒரு youtube பக்கம் திறந்து அதில் நிறைய விஷயங்களை பகிர்ந்து வருவதைப் போல தாமரையும் அண்மையில் youtube பக்கத்தில் தான் புதிதாக கட்டி வரும் வீட்டை வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவரின் மொத்த குடும்பமும் இடம்பெற்றுள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.