#image_title

தமிழ் சின்னத்திரையில் காதல் ஜோடிகளாக வளம் வருபவர்கள் ஏராளம். அப்படி காதல் ஜோடிகளில் தற்போது தம்பதிகளாக இருப்பவர்கள் தான் ஸ்ரேயா மற்றும் சித்து தம்பதி. இவர்கள் திருமணம் என்ற சீரியலில் ஜோடியாக நடித்த சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள். அந்த சீரியலில் இவர்களின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த சீரியல் கொரோனா காலப்பகுதியில் சென்று கொண்டிருந்ததால் விரைவில் முடிவுக்கு வந்தது.

அதன் பிறகு நட்பாக பழகி வந்த இருவரும் காதலிக்க ஆரம்பித்து பிறகு இரு வீட்டாரின் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலான நிலையில் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இதனிடையே திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடிக்க கதை எதுவும் சரியாக அமையாததால் தற்போது இருவரும் தனித்தனியாக ஜோடிகளுடன் இணைந்து நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஸ்ரேயா மற்றும் சித்து தம்பதி சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் அடிக்கடி ரீல்ஸ் செய்து சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது ஒரு குத்துப் பாடலுக்கு வேஷ்டியுடன் ஸ்பிரேயாகும் சித்துவும் இணைந்து குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது .