“நான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வரேன்”…. ஜனனி பேச்சால் ஷாக்கான சக போட்டியாளர்கள்…. வைரலாகும் ப்ரோமோ வீடியோ….!!! – cinefeeds
Connect with us

LifeStyle

“நான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வரேன்”…. ஜனனி பேச்சால் ஷாக்கான சக போட்டியாளர்கள்…. வைரலாகும் ப்ரோமோ வீடியோ….!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. முதலில் 21 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்பட கடந்த வாரம் 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தனர். ஒவ்வொரு வாரமும் புது புது டாஸ்க் கொடுத்து கொடுக்கப்பட்டு வரும் நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் நன்றாக போட்டிகளை விளையாடி வருகிறார்கள்.

இதனிடையே இந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருக்கும் என கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அந்த இரண்டு பேர் யார் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். அதன்படி நேற்று சனிக்கிழமை நிகழ்ச்சியில் ஒருவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதாவது மக்கள் மத்தியில் குறைந்த வாக்குகளை பெற்ற ராம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

Advertisement

இந்த நிலையில் இன்றைய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் கமல்ஹாசன் போட்டியாளர்களான ஜனனி மற்றும் ஆயிஷா யார் வருகிறீர்கள் என கேட்டார். அதற்கு ஜனனி இவ்வளவு நாளும் நான் கடின உழைப்பில் தான் இருந்து கொண்டேன். ஆனால் நான் லக்கி மூலமாகத்தான் இருந்தேன் என கூறி இருந்தால் நான் சந்தோசமாக வெளியே வருகிறேன் என கூறினார். இவ்வாறு ஆயிஷாவும் தன்னுடைய கருத்தை கூறிய நிலையில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கமல்ஹாசன் கூறும் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in