LATEST NEWS
அமெரிக்காவில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்… கெளரவப்படுத்தப்பட்ட நடிகை சமந்தா… வெளியான வீடியோ…

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதும் இந்தியாவில் மட்டுமின்றி உலகில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இந்த நாள் கொண்டாடப்படும் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் கடந்த 20ஆம் தேதி நேற்று இந்திய சுதந்திர தின கொண்டாட்ட விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஏற்கனவே இது போன்ற விழாவில் நடிகர்கள் அபிஷேக் பச்சன், அல்லு அர்ஜுன் ஆகியோர் கலந்திருந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் சமந்தாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தற்போது சினிமாவில் இருந்து குறுகிய காலத்திற்கு ஓய்வு எடுத்து வரும் சமந்தா பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார்.
தற்பொழுது அவர் மயோசிட்டிஸ் நோய்க்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற 41வது ஆண்டு இந்திய சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டுள்ளார். இந்த சுதந்திர தின அணிவகுப்பில் நடிகைகள் சமந்தா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் தேசிய கொடிகளை கையில் ஏந்தியவாறு பங்கேற்றனர்.
41வது ஆண்டு சுதந்திர தின அணிவகுப்பை இசை கலைஞர்களின் பாண்டு இசை சாலையின் வழிநெடுகிலும் திரண்ட இந்தியர்களை குதூகலப்படுத்தியது. இந்த விழாவில் நடிகை சமந்தா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் தேசிய கொடியை கைகளில் ஏந்தியவாறு பங்கேற்றனர். அவருக்கு இந்திய ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதுதொடர்பான புகைப்படங்களும் , வீடியோக்களும் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
Actress @Samanthaprabhu2 rocking the 41st #IndiaDayParade in NYC on Sunday.. pic.twitter.com/VNB3Hqbzjo
— Ramesh Bala (@rameshlaus) August 21, 2023