LATEST NEWS
ஒரே தேதியில் திருமண நாளை கொண்டாடிய சாந்தனு- கிகி , நஸ்ரியா – பகத் பாஸில் தம்பதி.. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் மகனும் நடிகருமான சாந்தனுவின் மனைவிதான் கீர்த்தி.
இவர் சிறந்த தொகுப்பாளினி மற்றும் நடனத்தில் சிறந்தவர் என்பது பலருக்கும் தெரிந்ததுதான். ஆனால் நடனத்தை பலமுறை இவர் வெளிப்படுத்தியது கிடையாது.
பெரும்பாலும் தொகுப்பாலினியாக ரசிகர்கள் மத்தியில் நிறைய பேசியுள்ளார். இவர் திருமணத்திற்கு பிறகும் தொகுப்பாளனியாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
தற்போது பெரும்பாலான நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் ஆடியோ லான்ச் போன்ற பல நிகழ்ச்சிகளில் இவர்தான் தொகுப்பாளினியாக உள்ளார்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீப காலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் சாந்தனு மற்றும் கிகி தம்பதியினர் நேற்று தங்களின் திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.
அதேசமயம் பிரபல ஜோடியான நஸ்ரியா மற்றும் பகத் பாஸில் தம்பதியினரும் அதே தேதியில் நேற்று தங்களின் திருமண நாளை கொண்டாடினர்.
தற்போது இரு ஜோடிகளும் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.