தமிழ் சினிமாவை பொருத்தவரை காமெடி என்றாலே வடிவேலு, விவேக் மற்றும் சந்தானம் உள்ளிட்ட நடிகர்கள் தான் நினைவுக்கு வரும். அதுவே பெண் காமெடி நடிகைகள் என்று கூறினால் அனைவரும் வருவது கோவை சரளாதான். இவர்களைத் தொடங்கி பெண் காமெடி நடிகையாக களமிறங்கியவர் தான் மதுமிதா. ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஜாங்கிரி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நகைச்சுவை தொடரில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதன் தொடர்ச்சியாக சன் டிவியில் பெரிய பாப்பா மற்றும் சின்ன பாப்பா என்ற தொடரில் நடித்து தனது அற்புதமான காமெடிகளை அதில் வெளிப்படுத்தி இருப்பார்.

இதனைத் தொடர்ந்து சினிமாவில் நடிக்க இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அங்கு பல்வேறு பிரச்சனைகளிலும் சிக்கிக் கொண்ட இவர் தற்கொலை செய்து கொள்ளக்கூட முயற்சி செய்தார். அதனால் பாதியிலேயே அந்நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியேறினார். பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து நடித்து வந்த இவர் சமீப காலமாக இதுவரை எதிலும் காண முடியவில்லை. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு மோசஸ் ஜோயயஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறினார். இவருக்கு தற்போது ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் மதுமிதா மகனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதனைப் பார்த்த ரசிகர்கள் நன்றாக வளர்ந்து விட்டாரே என கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Jangiri Madhumitha இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@madhumitha_moses_)