தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவரின் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். அதிலும் குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் இவரது திரை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அவரைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இவர் கொடுத்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இதனிடையே விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் 2, மழை பிடிக்காத மனிதன், கொலை ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இதனிடையே விஜய் ஆண்டனி கடந்த 2006 ஆம் ஆண்டு பாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு லாரா என்ற ஒரு அழகிய மகள் உள்ளார்.

அவரின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் அதனை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.