ரயில் பயணிகளுக்கு ஷாக்… ஜூன் 1 முதல் இட்லி, தோசை, சமோசா கட்டணம் உயர்வு.. மத்திய ரயில்வே அதிரடி அறிவிப்பு…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரயில் பயணிகளுக்கு ஷாக்… ஜூன் 1 முதல் இட்லி, தோசை, சமோசா கட்டணம் உயர்வு.. மத்திய ரயில்வே அதிரடி அறிவிப்பு…!!

Published

on

மத்திய ரயில்வே எல்லைக்குட்பட்ட ரயில் நிலையங்களில் உள்ள சிறிய உணவகங்களில் விற்பனை செய்யப்படும் சிற்றுண்டிகளின் விலையை நிர்வாகம் மாற்றியமைத்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி ஆலு வடை ரூ.15, பாவ் ரூ.5, வெஜ் சமோசா, வெஜ் பஃப் மற்றும் ஜவ்வரிசி வடை ஆகியவை தலா ரூ.20 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பாவ் பாஜி ரூ.50, மசாலா தோசை ரூ.35 மற்றும் சாம்பார், சட்னியுடன் கூடிய இரண்டு இட்லிகளின் விலை ரூ.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம் மிசால் பாவ் (ரூ.35), கச்சோரி (ரூ.15) ஆகியவற்றின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

உணவுகளின் தரத்தையும், கடைகளின் தூய்மையையும் சர்வதேச அளவிற்கு உயர்த்துவதற்காகவே இந்த கட்டண திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க, அங்கீகரிக்கப்பட்ட புதிய கட்டணப் பட்டியலை இரண்டு மொழிகளில் அனைத்துக் கடைகளிலும் தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், தரத்தை உறுதி செய்யவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் திடீர் சோதனைகள் நடத்தப்படும் என்றும், விதிகளை மீறும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்றும் ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in