LATEST NEWS
“1+1=2 கிடையாது, அது 11.. கூட்டி கழிச்சி பாருங்க கணக்கு சரியா வரும்”.. ஆஸ்திரேலியாவில் மேடையிலேயே மாஸ் காட்டிய பிரதமர் மோடி..!!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டணியின் அபார பலம் குறித்து பெருமிதத்துடன் எடுத்துரைத்தார். அப்போது இரு நாடுகளின் ஒற்றுமையை எண்களின் வலிமையோடு ஒப்பிட்டுப் பேசிய அவர், பொதுவாக ஒன்றையும் ஒன்றையும் கூட்டினால் இரண்டு என்றாகும், ஆனால் ஒரு ஒன்றுக்கு பக்கத்தில் மற்றொரு ஒன்று வந்து நின்றால் அது பதினொன்று எனக் குறிப்பிட்டார்.
அதேபோல, இன்று இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இணைந்து நிற்கின்றன. எனவே, நம் கூட்டணி 2 அல்ல, 11 ஆக வலிமை பெற்றுள்ளது” என்று சுட்டிக்காட்டியுள்ளார். இரு நாடுகளின் நட்புறவும், உலக அரங்கில் அவற்றின் கூட்டுச் செயல்பாடும் தனித்தனியாக இருப்பதை விட இணைந்து நிற்கும்போது 11 மடங்கு அசுர பலத்தைப் பெறுகிறது என்பதை உணர்த்தும் வகையில் அமைந்த பிரதமரின் இந்த சுவாரசியமான பேச்சு தற்போது சமூக ஊடகங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
