LATEST NEWS
ஆந்திரா, கர்நாடகாவுக்கு போய் பாருங்க… அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு..!!
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் நிலவி வரும் முறைகேடுகள், வருவாய் இழப்பு மற்றும் போலி மதுபான புழக்கம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார். அதன்படி, அண்டை மாநிலங்களான கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தற்பொழுது செயல்பாட்டில் இருந்து வரும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகளின் செயல்பாடுகள் குறித்து நேரில் சென்று விரிவான ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சரின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, தமிழக அரசு அதிகாரிகள் விரைவில் அண்டை மாநிலங்களுக்குப் பயணம் செய்யவுள்ளனர். அங்குள்ள மதுபானக் கொள்கைகள், விற்பனை முறைகள் மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து அவர்கள் தீவிரமாக ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் விரிவான அறிக்கை ஒன்றை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்க உள்ளனர். அண்டை மாநிலங்களின் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றித் தமிழகத்தில் உள்ள மதுபானப் பிரச்சினைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாகும்.
