காதலுக்குக் கண் இல்லை… ஆனா எருமை மாடு முக்கியம்.. காதலியை கல்யாணம் பண்ண பால் கொடுத்த வீட்டின் எருமை மாட்டை விற்ற வாலிபர்… ஆத்திரத்தில் பிரித்து மேய்ந்த குடும்பத்தினர்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காதலுக்குக் கண் இல்லை… ஆனா எருமை மாடு முக்கியம்.. காதலியை கல்யாணம் பண்ண பால் கொடுத்த வீட்டின் எருமை மாட்டை விற்ற வாலிபர்… ஆத்திரத்தில் பிரித்து மேய்ந்த குடும்பத்தினர்..!

Published

on

பீகார் மாநிலத்தில் காதலித்த பெண்ணைக் கைப்பிடிப்பதற்காக, குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்த வளர்ப்பு எருமை மாட்டை இளைஞர் ஒருவர் ரகசியமாக விற்றுத் திருமணம் செய்து கொண்ட விசித்திரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “காதலுக்குக் கண் இல்லை, அது சாதி மதங்களைப் பார்ப்பதில்லை” என்ற பழமொழிக்கு ஏற்ப, அந்த இளைஞர் மாற்றுச் சாதியைச் சேர்ந்த தன் காதலியைத் மணம் முடிக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக வீட்டில் பால் கொடுத்துக் கொண்டிருந்த எருமை மாட்டை யாருக்கும் தெரியாமல் விற்று, அந்தப் பணத்தைக் கொண்டு ஒரு கோவிலில் வைத்துத் தன் காதலியைக் கரம்பிடித்துள்ளார்.

இந்த சாதித் திருமணச் செய்தி அறிந்ததும் அதிர்ச்சியடைந்த இளைஞனின் குடும்பத்தினர், உடனடியாகத் திருமணம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளை செய்தனர். காதலுக்காகக் குடும்பத்தின் வாழ்வாதாரத்தையே விற்றதால் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற குடும்ப உறுப்பினர்கள், அந்த இளைஞரை நடுரோட்டிலேயே சரமாரியாக அடித்து வெளுத்தனர். இந்த விசித்திரக் காதல் திருமணமும், அதைத் தொடர்ந்து நடந்த அடிதடிச் சம்பவமும் தற்போது அப்பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in