விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் முழுக்க முழுக்க குடும்ப கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதால் இதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அண்ணன் தம்பி பாச கதையை கொண்டு சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது வீட்டில் உள்ள மூன்று மருமகள்கள் கர்ப்பமாக இருக்க மீனா அனைவரையும் கவனித்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் ஜீவா தனது அண்ணன் மூர்த்தியிடம் கோபமாக பேச அடுத்தடுத்து பல திருப்பங்களுடன் வரும் வாரங்களில் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியல் தொடக்கத்திலிருந்து ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

தற்போது ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சாய் காயத்ரி விலகிவிட்டார். அவருக்கு பதிலாக தற்போது vj தீபிகா ஐஸ்வர்யாவாக நடிக்கத் தொடங்கியுள்ளார். பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து சாய் காயத்ரி விலகிய பிறகு அவரின் அம்மாவுடன் பல கோவில்களுக்கு சென்று பூஜை செய்து வருகிறார்.

திருநாகேஸ்வரம் ராகு கோவில்,வேளாங்கண்ணி மற்றும் நாகூர் தர்கா உள்ளிட்ட இடங்களில் அவர் பூஜை செய்த வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

S A I G A Y A T R I இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@saai_gayatri)