விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் முதல் பாகம் பல வருடங்களாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சீரியல் முடிவுக்கு வந்தது. முதல் பாகம் முடிந்த கையோடு பாரதி கண்ணம்மா சீசன் 2 தொடங்கியது.

இந்த சீசனில் முதல் சீசனை இருந்தது போல பாரதி, கண்ணம்மா, சௌந்தர்யா, வெண்பா மற்றும் அஞ்சலி உள்ளிட்ட கதாபாத்திரங்களின் பெயர்களை மீண்டும் இந்த இரண்டாவது சீசனிலும் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் பாரதிகண்ணம்மா சீசன் 2 தொடங்கி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது இந்த சீரியல் தொடங்கி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் இதில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரியங்கா தாஸ் திடீரென சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார்.

அதனால் அவருக்கு பதிலாக தற்போது சாய் ரித்து என்ற நடிகை அஞ்சலி கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். அவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.