தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாத்தி  திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார். இவர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

ஆனால் கடந்த வருடம் ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிக்கை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இருந்தாலும் தங்களின் இரண்டு பிள்ளைகளுக்காக விவாகரத்து செய்யாமல் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா மகன்களுடன் பள்ளி ஸ்போர்ட்ஸ் டே விழாவில் பங்கேற்ற புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். தற்போது தனுஷ் மகனுடன் எடுத்திருக்கும் ஒரு செல்பி புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.