சன் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல்.

இந்த சீரியலில் முன்னணி நடிகைகளான கனிகாம், பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா மற்றும் சத்யபிரியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அதனைப் போலவே மாரிமுத்து மற்றும் பாம்பே ஞானம் போன்ற நடிகர்களும் நடித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆணாதிக்கம் மற்றும் பெண்ணுரிமை போன்ற கருத்துக்களை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகும் இந்த சீரியல் இதுவரை 300 எபிசோடுகளை எட்டியுள்ள நிலையில் சீரியலுக்கான வரவேற்பு பெரிய அளவில் உள்ளது.

அதில் வரும் சில சம்பவங்களை பலரும் தங்களின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களுடன் இணைத்து பார்க்கின்றனர்.இந்த  நிலையில் சீரியலில் நடிகை கனிகாவிற்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

தற்போது அவர் புதிய பூட்ஸ் உடன் நடக்க பழகி வருவதாக புகைப்படத்தை பதிவிட அதனை பார்த்து ரசிகர்கள் நீங்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்ற கமெண்டு செய்து வருகின்றனர். அந்த புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Kaniha இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@kaniha_official)