தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் உள்ள வரவேற்பு பெற்றது.

இதனைத் தொடர்ந்து லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ கே 62 திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அஜித் சுற்றுப்பயணங்கள் மேற்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

சமீபத்தில் கூட பெல்ஜியம், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் சொல்லிட்டா ஐரோப்பிய நாடுகளுக்கு பைக் ரெய்டு சென்றார்.

தன்னுடைய முதல் சுற்றுப்பயணத்தை முடித்த அஜித் இரண்டாவது கட்டம் சுற்றுப்பயணத்தை விரைவில் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

லைகா  நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்திற்கு பிறகு அஜித்குமார் துவங்க இருக்கும் இரண்டாவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்றுப் பயணத்திற்கு #rideformutualres என்ற பெயரிடப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.