LATEST NEWS
சாப்பாடு சரியில்லைன்னு சொன்னா இப்படியா பண்றது…? “மாப்பிள்ளை வீட்டாருக்கு ஷாக்…” நூதனமாக ரகளை செய்த பெண் வீட்டார்… செம ட்விஸ்ட்…!!
பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், மணமகன் வீட்டார் செய்த செயலுக்கு மணமகள் வீட்டார் நூதனமான முறையில் பழிவாங்கிய சுவாரசியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. திருமணத்திற்கு வந்திருந்த மாப்பிள்ளை தரப்பினர், தங்களுக்குப் பரிமாறப்பட்ட உணவுகள் மற்றும் உபசரிப்புகள் பிடிக்கவில்லை என்று கூறி மணமகள் வீட்டாரிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பெண்ணின் பெற்றோரை மதித்து நடக்காமல் அவர்கள் அநாகரிகமாக நடந்துகொண்டதால், கோபமடைந்த மணமகள் வீட்டார் அவர்களுக்குப் பாடம் புகட்ட ஒரு விசித்திரமான முடிவை எடுத்தனர்.
அதன்படி, மாப்பிள்ளை மற்றும் அவருடன் வந்திருந்த உறவினர்கள் அனைவரையும் ஒரு அறையில் வைத்துப் பூட்டி, அவர்கள் வந்த வாகனங்களின் சக்கரங்களில் இருந்த காற்றைப் பிடுங்கிவிட்டனர். மேலும், தங்களுக்கு நேர்ந்த அவமதிப்புக்கு நஷ்டஈடாக ஒரு குறிப்பிட்ட தொகையைத் தந்தால் மட்டுமே அறையைத் திறப்போம் என்று பிடிவாதம் பிடித்தனர். இறுதியாக, வேறு வழியின்றி மாப்பிள்ளை வீட்டார் தங்களது தவறை உணர்ந்து, பெண்ணின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டு சமரசம் செய்துகொண்ட பிறகே அங்கிருந்து கிளம்ப அனுமதிக்கப்பட்டனர்.
