“திருமணமான பிறகும் முன்னாள் காதலியுடன்…” உல்லாசமாக இருந்தபோது சட்டென வந்த கணவர்… அடுத்த நொடியே நடந்த பரபரப்பு சம்பவம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“திருமணமான பிறகும் முன்னாள் காதலியுடன்…” உல்லாசமாக இருந்தபோது சட்டென வந்த கணவர்… அடுத்த நொடியே நடந்த பரபரப்பு சம்பவம்…!!

Published

on

கர்நாடக மாநிலம் ராமநகரைச் சேர்ந்த பழைய இரும்பு வியாபாரியான 27 வயது இளைஞர் முகமது காசிம், திருமணமான தனது முன்னாள் காதலி அர்பியா கவுசருடன் சமூக வலைத்தளம் மூலமாக மீண்டும் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். பெங்களூருவில் வசித்து வந்த அர்பியா, தனது கணவர் முகமது அக்பரின் எச்சரிக்கையையும் மீறி, காசிமுடன் தொடர்ந்து தனிமையில் சந்தித்து வந்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி, அக்பர் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்கே காசிம் உல்லாசமாக இருக்கச் சென்றபோது, திடீரென அங்கு வந்த கணவர் மற்றும் அவரது உறவினர்களிடம் கையும் களவுமாகச் சிக்கியுள்ளார்.

ஆத்திரமடைந்த முகமது அக்பர், தனது உறவினர்களான ஓவைஸ் வாசா, முகமது சாந்த் பாஷா ஆகியோருடன் இணைந்து முகமது காசிமை கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த பயங்கரக் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த பேடராயனபுரா காவல்துறையினர், காதலனைத் தீர்த்துக்கட்ட கணவருக்கு உடந்தையாக இருந்த அர்பியா கவுசர், அவரது கணவர் அக்பர் உட்பட கொலைக்குத் துணை நின்ற 4 பேரையும் அதிரடியாகக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in