LATEST NEWS
பாம்பா இது..? தலையில் முடியுடன் ‘ஸ்டைலா… கெத்தா…’ போஸ் கொடுக்கும் நாகராஜ்… பார்லரில் நடந்த விசித்திர மேக்ஓவர்..!!
சமூக ஊடகங்களில் விலங்குகள் மற்றும் பாம்புகள் தொடர்பான பல வீடியோக்கள் வைரலாவது வழக்கம். ஆனால், தற்போது பார்ப்போரைக் கண் இமைக்க மறக்கச் செய்யும் ஒரு விசித்திரமான வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பொதுவாக உலகின் மிக ஆபத்தான பாம்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இராஜநாகத்தின் தலையில், பெண்களைப் போல நீளமான செயற்கை தலைமுடி பொருத்தப்பட்டு அதற்கு ஒரு புதுமையான மேக்ஓவர் செய்யப்பட்டுள்ளது. ஒரு பியூட்டி பார்லர் நாற்காலியில் இராஜநாகம் அமைதியாகச் சுருண்டு அமர்ந்திருக்க, அதன் தலையில் நீண்ட தலைமுடி அழகாகத் தொங்குவதைக் கண்டு நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர்.
இந்த வீடியோவில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட் மற்றும் இன்ஃப்ளூயன்ஸரான கார்லோஸ் அட்டிலா என்பவர் எவ்வித பயமும் இன்றி அந்தப் பாம்பின் அருகில் நிற்கிறார். மேலும், அந்த இராஜநாகத்தின் தலையில் பொருத்தப்பட்டுள்ள முடியை ஒரு வாஷ் பேசினுக்குக் கூட்டிச் சென்று மிகவும் கவனமாகக் கழுவுகிறார். அதன் பின்னர் அந்த முடிக்கு கலரிங் செய்து, ஹேர் டிரையர் மூலம் உலர வைத்து, சீப்பால் சீவி விடுகிறார். இந்த முழு மேக்ஓவர் செயல்முறையின் போதும், ஒரு கொடிய விஷப் பாம்பு என்று கூடப் பாராமல் அந்த இராஜநாகம் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாமல் ஒரு ‘பியூட்டி குயின்’ போல மிகவும் அமைதியாக ஒத்துழைப்புக் கொடுப்பது அனைவரையும் நெஞ்சைப் பதற வைக்கிறது.
https://www.instagram.com/reel/DXgwkwKAU3D/?utm_source=ig_web_button_share_sheet
கார்லோஸ் அட்டிலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்தத் திகைப்பூட்டும் வீடியோ, குறுகிய காலத்திற்குள் 1.5 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று இணையத்தில் சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த சமூக வலைத்தளப் பயனர்கள் பலவிதமான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர் நகைச்சுவையாக, “சகோதரா, இதுதான் உன்னுடைய கடைசி வாடிக்கையாளராக (Client) இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றும், “இதைப் பார்க்கும் போதே எனக்கு மூச்சு முட்டுகிறது, நீங்கள் எப்படி இவ்வளவு தைரியமாகச் செய்கிறீர்கள்” என்றும் கமெண்ட் செய்து தங்களது வியப்பையும் பயத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
