மீண்டும் மீண்டும் அப்படித்தான் பேசுவேன்… எனக்கும் பொண்டாட்டி, பிள்ளை இருக்கு… விஜய் அரசு மீது உதயநிதி காட்டம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மீண்டும் மீண்டும் அப்படித்தான் பேசுவேன்… எனக்கும் பொண்டாட்டி, பிள்ளை இருக்கு… விஜய் அரசு மீது உதயநிதி காட்டம்…!!

Published

on

தஞ்சாவூரில் தான் பேசிய பேச்சு விவசாயிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், அதனைத் திசை திருப்புவதற்காகவே தன் மீது இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த வழக்கை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற கோணத்தில் விமர்சித்துள்ளார்.

மேலும், தான் தன் மனைவி மற்றும் மகளுடன் குடும்பமாக வாழ்பவன் என்று குறிப்பிட்ட அவர், தான் பேசாத ஒரு விஷயத்தை பாதியிலேயே கட் செய்து, தவறாக ஒன்றிணைத்து தன் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். திட்டமிட்டே தனது பேச்சைத் திரித்து சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பரப்பி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

தான் எந்த இடத்திலும் டபுள் மீனிங்கில் (இருப்பொருள் தரும்படி) பேசவில்லை என்றும், எப்போதும் ஒரே நேர்த்தியான அர்த்தத்தில்தான் பேசினேன் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். தனது பேச்சு சரியானது என்பதால், எதிர்காலத்திலும் மீண்டும் மீண்டும் அப்படித்தான் பேசுவேன் என்றும் அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாகக் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in