LATEST NEWS
மருமகளுடன் கள்ளக்காதல்? மாமனார் எடுத்த அதிரடி முடிவு…வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்…நடுரோட்டில் சடலத்தை வைத்து மறியலில் ஈடுபட்ட உறவினர்..!
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள கோஹர்பூர் கிராமத்தில், 23 வயதான பிட்டு காஷ்யப் என்ற இளைஞர் நடுரோட்டில் கொடூரமாகக் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். தனது மருமகளுடன் அந்த இளைஞருக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகமடைந்த சுரேந்திர சிங் சவுகான் என்பவர், தனது இரண்டு மகன்களுடன் இணைந்து இந்தக் கொடூரச் செயலை அரங்கேற்றியுள்ளார். வயல் வேலைக்கு வந்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், பலமுறை எச்சரித்தும் இளைஞர் அதனைப் பொருட்படுத்தாததால் ஆத்திரமடைந்த மாமனார் சவுக்கான் தனது மகன்களுடன் சேர்ந்து இந்த கொலையைச் செய்துள்ளார்.
பட்டப்பகலில் நடந்த இந்தக் கொலையைக் கண்டித்து, உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினர் சடலத்தை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. மேலும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி தங்கள் வீட்டை விற்கப் போவதாக சுவரில் எழுதி அவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்த காவல்துறையினர், முக்கிய குற்றவாளியான சுரேந்திர சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவரது வீட்டின் ஒரு பகுதி புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டதுடன், கொலை வழக்கில் தொடர்புடைய மற்றும் தலைமறைவாக உள்ள அவரது இரண்டு மகன்களையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
