LATEST NEWS
கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை தாக்கிய மனைவி…. கையும் களவுமாக சிக்கிய ஜோடி…. காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த கணவன்…!!
உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் நபர், வாடகை வீட்டில் வசித்து வருகிறார். வேலை முடிந்து அவர் வீடு திரும்பியபோது, தனது மனைவியையும் அவரது காதலனையும் கையும் களவுமாகப் பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணவனுக்கும், அவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், மனைவியும் அவளது காதலனும் சேர்ந்து கணவனை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும், சமையலறையில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெயை கணவனின் மீது மனைவி ஊற்றியதில் அவரது கால் பலத்த காயமடைந்தது. காயமடைந்த கணவர் அங்கிருந்து தப்பித்து தனது சொந்த கிராமத்திற்குச் சென்று தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர் பல்வேறு காவல் நிலையங்களுக்கு அலைந்து திரிந்து, இறுதியாக பரேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நியாயம் கேட்டு புகார் அளித்துள்ளார். இருப்பினும், இது குறித்து விளக்கமளித்த காவல் கண்காணிப்பாளர், இந்த விவகாரம் ஒருதலைப்பட்சமானது அல்ல என்று தெரிவித்தார். கணவர் புகார் அளிப்பதற்கு முன்பாகவே, அடிப்படை ஆதாரமில்லாமல் சந்தேகப்பட்டு கணவர் தன்னைத் தாக்குவதாக மனைவியும் ஒரு புகாரை காவல் நிலையத்தில் அளித்திருந்தார். தற்போது இரு தரப்பு புகார்களையும் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், மருத்துவ மற்றும் தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில் நியாயமான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
