LATEST NEWS
டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்…!! ரூ.1,40,000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை… முழு விவரம் இதோ…!!!
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் முன்னணி பொதுத்துறை நிறுவனமான ‘பால்மர் லாரி & கோ. லிமிடெட்’ நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு இயக்கத்தின் மூலம் எக்சிகியூட்டிவ் டிரைனி மற்றும் கிராஜுவேட் இன்ஜினியர் டிரைனி ஆகிய பிரிவுகளில் மொத்தம் 62 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்குப் பொறியியல் (B.E / B.Tech) மற்றும் மேலாண்மை (M.B.A) சார்ந்த படிப்புகளை முடித்த தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்கள் ஆன்லைன் தளம் மூலமாக மட்டுமே வரும் ஜூன் மாதம் 9-ஆம் தேதிக்குள் தங்களது பதிவுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இப்பணிகளுக்குத் தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு முதலில் நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்குச் சான்றிதழ் சரிபார்ப்பு, குழு விவாதம் மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்பட்டு இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். இதில் இறுதித் தேர்வாகும் அதிர்ஷ்டசாலி நபர்களுக்கு மாதச் சம்பளமாகக் குறைந்தபட்சம் ரூ.40,000 முதல் அதிகபட்சமாக ரூ.1,40,000 வரை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குக் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பத்திற்கான கட்டணத்தைச் செலுத்த ஜூன் 11-ஆம் தேதி இறுதி நாளாகும் என்பதால் மத்திய அரசு வேலை தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
