தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலாபால். மலையாள நடிகை ஆன இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.
பிரபு சாலமன் இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்றார்.
அதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள் மற்றும் தலைவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் முப்பொழுதும் என் கற்பனை, வேட்டை மற்றும் வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்தார்.
அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக கிடைக்காத நிலையில் போட்டோ சூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். மறுபக்கம் ஆன்மீக சுற்றுலா செல்வதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தனது அம்மாவின் பிறந்த நாள் நினைவாக மரக்கன்று ஒன்றை அவர் நட்டுள்ளார். தன் அம்மாவுடன் பிறந்த நாளில் அருகில் இருக்க முடியாவிட்டாலும் அவரை நினைவாக இந்த மரத்தை நடுவதாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க