CINEMA
ஜெயம் ரவி செஞ்ச பெரிய தப்பு அது தான்…. புட்டு புட்டு வைத்த பிரபல பத்திரிக்கையாளர்…!!
தமிழ் சினிமாவில் திரையுலகங்கள் திரையுலகினர் பலரும் விவகாரத்தை பெற்று வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இது தொடர்பாக சமீபத்தில் பத்திரிகையாளர் சேகுவாரா அளித்த பேட்டி ஒன்றில் ,ஜெயம் ரவி செய்த பெரிய தப்பு வேலையும் தனிப்பட்ட வாழ்க்கையும் ஒன்றாக வைத்ததுதான். திருமணத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் மாமியார் தான் எல்லாத்தையும் பார்த்துக் கொள்கிறார்.
கால்ஷீட் கொடுப்பது, கதை கேட்பது எல்லாமே அவர்தான். ஜெயம் ரவி பிரிவதாக அறிவித்தும் கூட ஆர்த்தி இன்னமும் ஆர்த்தி ரவி என்றுதான் போட்டுக்கொள்கிறார். இதற்கு என்ன அர்த்தம் இன்னும் ஜெயம் ரவியின் விவகாரத்து பூர்த்தி ஆகவில்லை என்றுதான் அர்த்தம். ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கையில் கூட என் நெருக்கமானவர்களின் தனி உரிமைக்காக நான் இந்த முடிவை எடுத்தேன் என்று தான் கூறுகிறார்.
அந்த நெருக்கமானவர் யார்? ஆர்த்தி. அவருக்காக தான் இந்த முடிவை எடுத்துள்ளார். ஜெயம் ரவிக்கு எந்த ஒரு நடிகையுடன் தொடர்பு என்றோ, ஆர்த்திக்கு வேறு ஒருவருடன் தொடர்பு என்றோ எந்த விதமான விமர்சனமும் வந்ததில்லை. இந்த பிரச்சினையே மாமியாரால் தான். என்று பேசியுள்ளார்.