42 ஆண்டுகளை கடந்த கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா..? காலத்தால் மறக்க முடியாத காதல் காவியம்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

42 ஆண்டுகளை கடந்த கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா..? காலத்தால் மறக்க முடியாத காதல் காவியம்..!!

Published

on

காதலை மையமாக வைத்து கடந்த 1982-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மூன்றாம் பிறை. இந்த படத்தை பாலு மகேந்திரா எழுதி இயக்கினார். மூன்றாம் பிறை படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ஒய்.ஜி.மகேந்திரன், சில்க்ஸ்மிதா, பூரணம், விஸ்வநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த முதல் படம் மூன்றாம் பிறை தான். இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். கடந்த 1982-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி மூன்றாம் பிறை திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ஓர் ஆண்டுக்கு மேலாக ஓடியது. இந்த படம் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவுக்காக தேசிய விருதுகளை வென்றது.

Advertisement

மேலும் சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்று கொடுத்தது. மூன்றாம் பிறை படத்தில் உலக நாயகன் கமலஹாசனும், ஸ்ரீதேவியும் இணைந்து நடித்த காட்சிகள் மறக்க முடியாது. ஸ்ரீதேவியின் குழந்தை தனமான நடிப்பும் கமல்ஹாசன் காட்டும் அக்கறையும் அனைவரையும் வெகுவாக ஈர்த்தது.

இதே படத்தை பாலு மகேந்திரா ஹிந்தியில் சத்மா என்ற பெயரில் இயக்கி உள்ளார். படத்தில் இடம்பெற்ற கண்ணே கலைமானே பாடலை யாராலும் மறக்க முடியாது. மூன்றாம் பிறை படத்தில் நடித்த திரை நட்சத்திரங்கள் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார்கள்.

Advertisement