LATEST NEWS
அப்பா வயது நடிகர்களுடன் ஜோடி போட்டு ரொமான்ஸ் செய்த கமல் மகள் ஸ்ருதிஹாசன்…. வைரல் புகைப்படம்….!!!
தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். அவர் தற்போது சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி வருகின்றன. ஸ்ருதிஹாசன் ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்செல் என்பவரை காதலித்தார். பின்னர் பிரேக்கப் செய்துவிட்டார். தற்போது சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார்.
அதே சமயம் தனது காதலருடன் இருக்கும் பல புகைப்படங்களையும் இணையத்தில் அவ்வப்போது பகிர்வது வழக்கம். சமீபத்தில் முகம் வீங்கி மூக்கில் தண்ணீர் வரும்படி அடையாளம் தெரியாமல் இருக்கும் புகைப்படத்தை சுருதிஹாசன் வெளியிட்ட ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில் அப்பா வயது எட்டிய நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் 62 வயதான பாலகிருஷ்ணா உடன் வீரசிமா ரெட்டி என்ற திரைப்படத்திலும் 67 வயதான மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் வால்டர் வீரய்யா திரைப்படத்திலும் நடித்துள்ளார். அந்த இரண்டு திரைப்படத்தின் பாடல்களும் சமீபத்தில் வெளியாகிய நிலையில் அப்பா வயது நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ள ஸ்ருதிஹாசன் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
