LATEST NEWS
‘எனக்கு பிடிச்சு தான் கல்யாணம் பண்ணேன்’… மனம் திறந்து பேட்டியளித்த ‘கனா காணும் காலங்கள்’ கிரண்… வீடியோ வைரல் …

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘கனா காணும் காலங்கள்’. இந்த தொடர் ஒரு திடமான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தது. மக்கள் மனதில் இந்த தொடர் இன்று வரை ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது என்றே கூறலாம். இந்த சீரியலில் நடித்த புகழ் பெற்றவர் தான் நடிகர் கிரண்.
இதைத் தொடர்ந்து பல டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தற்போது சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் இன்று திரையுலகில் பிரபலங்களாக ஜொலிக்கின்றனர்.
நடிகர் கிரண் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் கிரணுக்கு Manjusha Karamala எனபவருடன் திருமணம் முடிந்தது. அவரின் திருமண புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் நடிகர் கிரண் தற்பொழுது பிரபல சேனல் ஒன்றுக்கு தனது திருமணம் குறித்த சில சுவாரசியமான தகவல்களை பேட்டியளித்துள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
View this post on Instagram