LATEST NEWS
அட நம்ப ரம்பாவா இது?.. நடுக்கடலில் குழந்தைகளுடன் செம மாஸான லுக்கில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!
இந்திய சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ரம்பா. தெலுங்கில் வெளியான ஆ ஒக்கடு அடக்கு என்ற திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார்.
அதனைப் போலவே தமிழ் சினிமாவில் உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். இவர் விஜய் மற்றும் சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவர் இலங்கைத் தமிழரான இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து விலகினார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது ரம்பா குழந்தைகள் மற்றும் குடும்பத்தை மட்டும் கவனித்து வருகின்றார்.
இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்பா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.
அதன்படி தற்போது ரம்பா தற்போது குடும்பத்துடன் வெகேஷன் சென்றுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
