தாயையும் இழந்து, கணவரையும் இழந்து, 1 வயது கைக்குழந்தையுடன் கதறும் ‘அங்காடித்தெரு’ நடிகை சிந்துவின் மகள்… கண்கலங்க வைத்த பேட்டி இதோ… - cinefeeds
Connect with us

LATEST NEWS

தாயையும் இழந்து, கணவரையும் இழந்து, 1 வயது கைக்குழந்தையுடன் கதறும் ‘அங்காடித்தெரு’ நடிகை சிந்துவின் மகள்… கண்கலங்க வைத்த பேட்டி இதோ…

Published

on

2010ல்  இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ‘அங்காடித் தெரு’. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் மகேஷ். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்திருந்தார். ‘அங்காடி தெரு’ படத்திற்கு பிறகு நடிகை அஞ்சலி தமிழ், தெலுங்கு என பயங்கர பிஸியாகி முன்னணி நாயகியாகவும் மாறிவிட்டார்.

இத்திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர் நடிகை சிந்து. இதை தொடர்ந்து இவர் சினிமாவிலும், சீரியலிலும் பிஸியாக நடித்து வந்தார். கொரோனா காலக் கட்டத்தில் கூட பல்வேறு உதவிகளை செய்தவர் சிந்து. இவர் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கும் மேலாக கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

Advertisement

இதைத்தொடர்ந்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‘தினம் வலியால் துடிப்பதற்கு பதிலாக எனக்கு விச ஊசி போட்டு கொன்று விடுங்கள் என்று டாக்டர்களிடம் கேட்டுப் பார்த்தேன்’ என்று கூறி ரசிகர்களை கண்கலங்க வைத்தார். இப்படி நோயால் அவதிப்பட்ட நடிகை சிந்துவுக்கு ஒரு மகளும் உள்ளார்.

நடிகை சிந்துவின் மகளுக்கு திருமணமாகி ஒரு வயது கைகுழந்தையும் உள்ளது. அவரின் கணவரும் இறந்துவிட்டார். இந்நிலையில் நடிகை சிந்துவும் நேற்று நோய் பதிப்பின் காரணமாக உயிரிழந்தார்.

Advertisement

இதைத்தொடர்ந்து தற்பொழுது நடிகை சிந்துவின் மகள் ‘ கணவரும் இல்லாமல், அம்மாவும் இல்லாமல் 1 வயது குழந்தையோடு நான் என்ன செய்ய போகிறேன் என தெரியவில்லை’ என கலங்கிய வீடியோ தற்பொழுது இணையாயத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த வீடியோ…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in