‘மின்சாரக் கனவு’ திரைப்படத்தில் நடிகர் பிரபு தேவா , நடிகை கஜோலுக்கு டப்பிங் கொடுத்தது இந்த பிரபல நடிகர்களா?… வெளியான சுவாரசிய தகவல்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘மின்சாரக் கனவு’ திரைப்படத்தில் நடிகர் பிரபு தேவா , நடிகை கஜோலுக்கு டப்பிங் கொடுத்தது இந்த பிரபல நடிகர்களா?… வெளியான சுவாரசிய தகவல்…

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில்  ஒருவராக வலம் வருபவர் நடிகர் பிரபுதேவா. இவர் நடிப்பில் 1997 இல் வெளிவந்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘மின்சார கனவு’. இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.  இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதில் இன்றளவும் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.

ஏவிஎம் நிறுவனம் தங்களது 50 வருட நிறைவை கொண்டாடும் விதமாக மின்சார கனவு திரைப்படத்தை தயாரித்திருந்தது. இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் பரிந்துரையில் ஒளிப்பதிவாளரும் விளம்பரப்பட இயக்குனருமான ராஜீவ் மேனன் இடம் இயக்குனர் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது. அரவிந்த்சாமி, கஜோல் ,எஸ்பி பாலசுப்ரமணியம், நாசர் என பல பிரபலங்கள் தங்களது திறமையான நடிப்பை இத்திரைப்படத்தில் வெளிப்படுத்தியிருந்தனர்.

Advertisement

இத்திரைப்படத்தில் அழகு, படிப்பு, திறமை,  குணம் என அனைத்தும் கொண்ட அரவிந்த்சாமி கஜோலின் மீது காதல் கொள்வார். ஆனால் கஜோலுக்கோ கன்னியாஸ்திரி ஆக வேண்டும் என்று ஆசை. கஜோலின் மனதை மாற்ற மனிதர்களை பேசி மயக்கும் பார்பரான பிரபுதேவாவின் உதவியை அரவிந்த்சாமி நாடுகிறார். அவரும் ஒத்துக் கொண்டு கஜோலின் மனதை கன்னியாஸ்திரி கனவில் இருந்து கல்யாண கனவுக்கு மாற்றுகிறார்.

ஆனால் ஒரே ஒரு திருப்பம். அவருக்கு காதல் அரவிந்த் சாமியின் மீது வருவதற்கு பதில் பிரபுதேவாவின் மீது வருகிறது. இப்படத்தில் பிரபு தேவா-கஜோல் லவ் டிராக் ரசிகர்களின் பேவரெட். இத்திரைப்படத்தில் நடிகர் பிரபுதேவாவுக்கும் , நடிகை கஜோலுக்கும் டப்பிங் கொடுத்த பிரபலங்கள் யார் தெரியுமா? அவர்கள் வேறு யாரும் இல்லை. நடிகர் விக்ரமும் , நடிகை ரேவதியும் தான்.தற்பொழுது இந்த சுவாரசியமான தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Advertisement

#image_title

#image_title

#image_title

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in