CINEMA
நீங்க கிரேட் சார்.. இலவச ஆம்புலன்ஸை தொடர்ந்து விவசாயிகளுக்காக KPY பாலா செய்த உதவி.. குவியும் வாழ்த்துக்கள்..!!

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் போட்டியாளர்களாக பங்கேற்ற பலரும் இன்று மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளனர். அப்படி சின்ன திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் KPY பாலா. இவர் கலக்கப்போவது யாரு மற்றும் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.தற்போது இவர் பல திரைப்படங்களில் காமெடியன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமூக அக்கறை கொண்ட நபராக திகழ்ந்து கொண்டிருக்கும் பாலா தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள சிறியவர்களை படிக்க வைப்பதுடன் ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது மட்டும் ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவு என பலவிதமான உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில் கூட தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்தார்.
அதே சமயம் ஈரோடு அருகே உள்ள கடம்பூர் மலைவாழ் கிராம மக்களுக்காக ஆம்புலன்ஸ் வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். மருத்துவ வசதி இல்லாத மலை கிராமங்களை தேர்வு செய்து ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தருவதாக நடிகர் பாலா தெரிவித்திருந்த நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் சோளக்கணை மலை கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று நடிகர் பாலா ஐந்து லட்சம் மதிப்பில் இலவச ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தாமரைக்கரை மலை கிராமத்தை சேர்ந்த 125 விவசாயிகளுக்கு மண்வெட்டி, கடப்பாறை மற்றும் இரும்பு கூடை போன்ற வேளாண் உபகரணங்களையும் பாலா வாங்கி கொடுத்துள்ளார். தற்போது இவரின் செயலை பாராட்டி பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.